Sun. Oct 6th, 2024

கேரளாவில் சமூக நீதியை நிலைநாட்டிய வெல்ஃபேர் கட்சி …

ஜூன் 30-2019

வரலாற்று முக்கியத்துவம்  மிக்க நிகழ்வு கேரளா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

 கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்ரா என்ற பகுதியில் பையோழி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் “சாம்பவ” இன தலித் மக்கள் மட்டுமே பயின்று வருகின்றார்கள். மற்ற சாதியினர்  தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்ப்பதில்லை. நீண்ட நெடுங்காலமாக இந்த தீண்டாமை செயல்பாடு இருந்து வருகிறது. அரசும் சமூக மக்களும் இதை குறித்த எவ்வித கவலையுமின்றி இருக்கின்றனர். கமியூனிஸ்டுகள் ஆளும் மாநிலத்திலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்று வருகிறது.

தீண்டாமையின் புதிய வடிவம்  இப்பொழுது உடைத்தெரிய பட்டிருக்கிறது .

வெல்ஃபேர் கட்சியின் ஆசிரியர்கள் சங்கமான கேரளா ஆசிரியர்கள் இயக்கம் (Kerala State Teachers Movement – KSTM) தலைமையில் முஸ்லிம் பெற்றோர்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் இணைத்து தீண்டாமையின் புதிய மதில் சுவர்களை உடைத்தெரிந்து இருந்திருக்கிறார்கள்.

தங்கள்  பள்ளியில் இணைந்த முஸ்லிம் சிறுவர்களை  ஆனந்தத்தோடு பாடல்களை பாடி வரவேற்று அசத்தி இருக்கிறார்கள் தலித் மாணாக்கர்கள்.  முஸ்லிம் பெற்றோர்களின்  தீர்க்கமான முடிவையும் அதற்கு வழிவகுத்த கேரளா மாநில ஆசிரியர்கள் சங்க(KSTM)  நிர்வாகிகளையும் பள்ளி நிர்வாகிகளும் தலித் சிறுவர்களுடைய பெற்றோர்களும் மனமார பாராட்டி இருக்கின்றனர்.

 சமூகப்  மறுமலர்ச்சியில் தீர்க்கமான நிலைப்பாடுகளோடு முன்னேறிக் கொண்டிருக்கும் வெல்ஃபேர் கட்சியின் வரலாற்றில் புதிய ஒரு மகுடம் இது.