Sun. Oct 6th, 2024

கஸ்தூரி மூப்பனார் மறைவிற்கு | திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி |

சென்னை, ஜீன் 26-2019..,

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார், உடல்நலக்குறைவால், சென்னையில் இன்று காலமானதை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து அஞ்சலி செலுத்தினார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் உடல்நலக்குறைவால், கீழ்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 88.

இச்செய்தியை அறிந்த, திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். அப்போது, ஸ்டாலினுடன் திமுக எம்.எல்.ஏக்கள் பொன்முடி மற்றும் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இறுதி சடங்குகள், அவரின் சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள்கோவிலில், நாளை மாலை நடக்கிறது.

நிருபர் கோகுலன்