தங்கதமிழ்செல்வன் | போனில் பேசியது யாரிடம்? |

ஜூன் 25-2019
தங்கதமிழ் செல்வனிடம் போனில் பேசியது திருப்பரங்குன்றம் வேட்பாளர் அவர்களின் சகோதரர் தான் என்கின்றனர் அமமுகவினர். உண்மை தானா..?

ஏனென்றால் அந்த ஆடியோவில் கேட்ட குரல்.. அண்ணன் எங்கே.? என்று கேட்டபோது, நான் ஊரில் இருக்கிறேன் என்கிறார் எதிர்முனையில் இருப்பவர். உதவியாளர் அனைவரும் சென்னையில் தானே உள்ளார்கள்.! நான் ஊரில் இருக்கிறேன்… என யார் பேசினார்.? என நாம் அந்த ஊரில் இருக்கும் நபர் யார் என விசாரித்தபோது… நமக்கு கிடைத்த தகவல், திருப்பரங்குன்றம் வேட்பாளரின் தம்பி எனவும்.. இவர் அண்ணன் (வெற்றிக்காக) திமுகவில் இருந்து இங்கு வந்து தேர்தல் பணி செய்தவராம். இவர் ஏன் தங்கதமிழ்செல்வன் அவரிடம் பேச வேண்டும்.? என்று விசாரணையில் இறங்கியதும், நமக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி… தலைமை ஒரு மண்டல மாவட்ட மற்றும் கொள்கை பரப்புச் செயலாளரை நீக்குவதற்கு முன்பே அங்குள்ள ஒன்றிய மற்றும் மாவட்ட பொறுப்பில் உள்ள அனைவரிடமும் உரையாடி உள்ளார். வெற்றி வாய்ப்பை இழந்த திருப்பரங்குன்றம் வேட்பாளர். அது மாவட்ட செயலாளரான தங்கதமிழ்செல்வனுக்கு தெரியவர அவர் உடனே அவருக்கு போன் செய்தார்.

போன் சுவிட்ச் ஆஃப் என்றதும் அவரது தம்பியை தொடர்பு கொண்டு… அண்ணன் எங்கே என்று கேட்கிறார் அதற்கு நான் ஊரில் இருக்கிறேன் என்கிறார். பொட்டைதனமான அரசியல் செய்ய வேண்டாம்..! நீ தேனியில் என் அனுமதி இல்லாமல் மீட்டிங் போட்டு விட்டாய்..! நான் நல்லவன் நான். மதுரையில் மீட்டிங் நடத்தவா? நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்க முடியாது உங்களால் அவ்வளவு தான் அழிந்து விடுவார்கள் அனைவரும். நீயும் தான் அழிந்து விடுவாய், உன் அண்ணனையும் உன்னையும் அரசியலை விட்டு காலி செய்கிறேன்.!!! என்றும் பேடிதனமான அரசியலை டிடிவியும் செய்யவேண்டாம் எனக்கூறுகிறார். காரணம் கட்சியை விட்டு நீக்கவும் இல்லை… அதற்குள் இப்படி ஒதுக்குவதற்கு காரணம் என்ன?
நமக்கு தெரிந்தவரை அரசியலில் இதுவரை டிடிவியை நம்பி வந்த பழைய நபர்கள் யாரையும் வைத்துக்கொள்ள இவர்களுக்கு மனமில்லை..! எப்போதும்போல் மன்னார்குடி குடும்பத்தில் எவரும் அரசியல் தெரிந்தவர்கள் இருக்ககூடாது என்பதே காரணமாக இருக்கலாம் என தகவல்.!?!? இதற்கு உதாரணமாக இப்போது உள்ள அமைச்சர்களின் பேட்டியை பார்த்தாலே தெரிந்துவிடும்…
நமது நிருபர்