Tue. Oct 8th, 2024

லஞ்சம் வாங்கிய | துணை வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி கைது |

ஜூன் 22-2019

லஞ்சம் வாங்கிய | துணை வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி கைது |

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர் கிராமத்தில் நிலம் வரைமுறை ஒப்புதல் வழங்க ரூபாய் 56,600 லஞ்சம் பெற்ற, அரக்கோணம் துணை வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்..

ஜீவா

அரக்கோணம், மோசூர் கிராமத்தில் முத்துராஜ் என்பவர்… நிலம் வரைமுறைப்படுத்த சான்றிதழ் பெறுவதற்காக அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று… அங்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஜீவா (57) என்பவரை அணுகி உள்ளார். இதற்கு ஜீவா நிலம் வரைமுறை செய்ய ரூபாய் 86 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் முத்துராஜ் இது குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் முத்துராஜ் இடம் 56,600 ரூபாய் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து வழங்குமாறு அறிவுரை கூறியுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில்… முத்துராஜ், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே ஜீவாவை வரவழைத்து… பணத்தை கொடுத்துள்ளார். அப்பொழுது மறைந்திருந்த வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையிலான காவல் துறையினர். ஜீவாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, அருகிலிருந்த ரயில்வே பொறியியல் அலுவலகத்தில் வைத்து நீண்ட நேரம் விசாரணை செய்து பின்னர் கைது செய்யதனர்.

நமது நிருபர்