முன்விரோதம் காரணமாக | கொலை செய்த நபர் கூலிப்படையுடன் கைது |
ஜூன் 18-2019
கடந்த 12 ஆம் தேதி அன்று, கடலூர் மாவட்டம், பண்ரூட்டி வ.உ.சி தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி (45) என்பவரை… அடையாளம் தெரியாத சிலர் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானர்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து.. உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில்… இந்த கொலையானது முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர், 5 பேர் கொண்ட ஒரு கூலிப்படையை ஏற்பாடு செய்து… கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பயந்து 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பரணி (எ) தீபன்(33), மற்றும் அந்தோணி தாஸ்(34) என்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்…
நிருபர் ராம்