பெண் தற்கொலை | கணவர் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை |
பெண் தற்கொலை | கணவர் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை |
பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி சலவைத் தொழிலாளி இவரது மகன் விக்னேஸ்குமார் (24) பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் பூர்ணிமா 24 என்பருடன் காதலித்து மூன்று வருடங்களுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீசாய்ஷா என்ற 2 வயது குழந்தை உள்ள இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் விக்னேஷ்குமார் கண்விழித்து பார்த்த பொழுது பூர்ணிமா அறையில் சேலையால் தூக்கிட்ட நிலையில் தொங்கிய கொண்டு இருக்க உடனே விக்னேஷ்குமார் அலறியடித்து தன் பெற்றோரை அழைத்திருக்கிறார்…
பெற்றோர்கள் உதவியுடன் மனைவி உடலை கீழே இறக்கி பார்த்த பொழுது அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்துள்ளது. தகவலறிந்த பெருந்துறை போலீசார் பூர்ணிமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு பெருந்துறை டிஎஸ்பி ராஜ்குமார், பெருந்துறை ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தினர் வருகின்றனர்..
நிருபர் சண்முகசுந்தரம்