பஸ் டே கொண்டாடிய | கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை |
ஜூன் 17-2019
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் தின கொண்டாடத்தில் ஈடுபட்டதில் 13 மாணவர்களை காவலர்கள் மடக்கி பிடித்து விசாரணை.
கோடை விடுமுறை முடிந்து பின் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்று வந்தது. இதை அறிந்த அண்ணா நகர் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் மற்றும் உதவி கமிஷனர் குணசேகரன், அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் ஆகியோர் தலைமையில் என்.எஸ்.கே.நகர், ஷெனாய் நகர், அண்ணா நகர் வளைவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆவடியில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் திடீரென ஏரிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… பஸ் தின கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானர். இதை அறிந்த போலீசார் அங்கு வர… காவலர்களை கண்டதும் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட்ட மாணவர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
இதில் 13 மாணவர்களை அமைந்தகரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போது படிக்கும் மாணவர்கள் என தெரியவந்தது. பஸ் தினத்தை கொண்டாட கூடாது என அறிவுறுத்தி வரும் நிலையில்… போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போதே மாணவர்கள் பஸ் தினத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நிருபர்