பணியின் போது சுவர் விழுந்து | ஐசிஎப் ஊழியர் பலி |
ஜூன் 16-2019..,
ஐ.சி.எப்.பில் சுவர் விழுந்து சூப்பர்வைசர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிராமம், அந்தியூர் தாலுகாவை சேர்ந்தவர் திருமூர்த்தி வயது 32. இவர் ஐ.சி.எப்பில் ஒப்பந்தம் அடிப்படையில் எலக்ட்ரிகல் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். நேற்று இரவு 10.30.மணி அளவில் ஐ.சி.எப் ஷாப் நம்பர் 30 இல் இரவு உணவு உண்ணும்போது… எதிர்பாராத விதமாக ரயில் பெட்டியை தூக்கிச் சென்ற கிரேன் வாகனம் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் அந்த சுவர் இடிந்து திருமூர்த்தி மேல் விழுந்ததில்… அவரது தலை, கழுத்து தோள்பட்டை போன்ற பகுதிகளில் பலத்த காயம் அடைந்தது. அதில் உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஐ.சி.எப் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்… சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஐ.சி.எப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சுவர் இடிந்து விழுந்து சகதொழிலாளி பலியான சம்பவம் ஐ.சி.எப் பணிமனையில் தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது நிருபர்.