Sat. Dec 21st, 2024

கோயம்பேடு பஸ் நிலையத்தில் | முதியவர் வெயிலின் தாக்கத்தில் பலி |

ஜூன் 16-2019..,

தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து… தற்போது படிப்படியாக வெயில் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் குறையாமல் சராசரியாக 100- டிகிரிக்கு அதிகமாக வெயில் நீடிக்கிறது. இதில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாட்ச்மேனாக பணி செய்ததாக தகவல் இருக்கும் முதியவர் ஒருவர் இறந்ததும்.. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் 60 வயது மதிக்கதக்க முதியவர் வெயிலின் தாக்கத்தில் உயிரிழந்ததை உறுதி செய்ததை அடுத்து… முதியவர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த முதியவரின் முழு விவரங்களையும், இவரது சொந்த ஊர் என்ன.? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நமது நிருபர்