தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு போதுமான இருக்கைகள் நிழற்கூடைகள் இல்லாததால் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவதி….
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூரில் இன்று மாலை அரசு சார்பில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 100- கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தமிழக முதல்வர் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் காலை முதலே வீரகனூரில் குவிய தொடங்கினர். அவர்களுக்கு தேவையான இருக்கைகள், நிழற்குடைகள் போதுமானதாக இல்லாததால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெயிலில் மண்தரையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த பொது மக்களுக்கு தேவையான இருக்கைகள் நிழற்குடை குடிநீர் வசதிகள் இல்லாததால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை திரளானோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்…
A
K@ஆனந்தகுமார்