Sun. Oct 6th, 2024

ஒருவாய் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி | கே.எஸ்.அழகிரி கண்டனம் |

ஜூன் 16-2019

சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துக் கொண்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்… தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது ஒரு வாய் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதற்காக தமிழக அரசை…தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு குடிநீர் அளிக்க வேண்டியது அரசின் கடமை அதற்கு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் இந்த நிலையில் அளும் கட்சி ஒரு தலைமையா? அல்லது இரு தலைமையா? என சிந்தித்து கொண்டு இருக்கிறது.அதைத் தவிர்த்து இதற்கு தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காவேரி மேலாண்மை வாரியத்தை கலைக்க வேண்டும் என்று… ராகுல் காந்தி எந்த இடத்திலும் பேச வில்லை அதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் வெளியிட்டால்…தான் அரசியலை விட்டு விலகுவதாகவும், அப்படி இல்லை என்றால்…முதல்வர் அரசியலை விட்டு விலக வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜெயலலிதா அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்க்கும் கருத்து வேறுபாடு இருத்தாலும், மாநில உரிமைகளை அவர் விட்டு கொடுத்தது இல்லை. தமிழக காங்கிரஸ் திருவள்ளூர் பகுதியில் ஏதேனும் ஒரு குளத்தை தேர்ந்தெடுத்து. தூர்வாரி முன்னுதாரணமாக செயல்பட இருக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டாமல் தமிழகத்திற்கு தேவையான நிதியை கேட்டு பெற வேண்டும் என்றும், பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தோல்வியின் விரக்தியில் கண்டபடி பேசி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியை பிடித்த 3 மாநிலங்களில் உடனடியாக விவசாய கடனை ரத்து செய்தது பாடப்புத்தகத்தில் காவி வண்ணத்தில் பாரதியின் முண்டாசை அச்சடித்தது மிகவும் தவறு உலகம் நேசிக்கும் கவிஞருக்கு ஆர்.எஸ்.எஸ் சாயம் பூசக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்..

நமது நிருபர்