Sat. Dec 21st, 2024

காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடியை | என்கவுண்டர் செய்த போலீசார் |

ஜூன் 15 – 2019

சென்னையில் பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

சென்னையை கலக்கி வந்த ரவுடிகளில் முக்கியமானவன் குன்றத்தூர் வைரம். இவன் கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி தொழிலை விட்டு அமைதியாக வாழ்ந்து வருவதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி

இந்நிலையில் வைரத்தின் சகோதரி மகன் கதிர் மற்றும் அவரது கூட்டாளி வல்லரசு ஆகிய இருவர் மீதும் கொலை கொலை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்… தேடப்படும் குற்றவாளிகளான இருவரும், நேற்று தனது கூட்டாளிகளுடன் வியாசர்பாடி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது. அந்த தகவலின் பேரில் எம்.கே.பி நகர், BSNL குடியிருப்புப் பகுதிக்கு சென்ற போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ரவுடி வல்லரசு எம்கேபி நகர் காவலர் பவுன்ராஜ் என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து வியாசர்பாடி காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மற்றும் புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி இருவருடைய தலைமையில் தனிப்படை அமைத்து ரவுடிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மாதவரம் புதிய பேருந்து நிலையம் அருகே காலியான முட்புதரில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்… சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்களை ரவுடி கும்பல் தாக்க முயற்சித்துள்ளது.

இதில் எம்.கே.பி நகர் காவலர்கள் தீபன் மற்றும் பிரேம் ஆகிய இருவர் மீதும் ரவுடி கும்பல் அரிவாளால் தாக்கியுள்ளது. இதனையடுத்து ஆய்வாளர்கள் இருவரும் தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசுவை துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர். இதில் மார்பில் இரண்டு குண்டுகளும் கால் பகுதியில் ஒரு குண்டு பாய்ந்ததில் வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உடன் இருந்த சக ரவுடிகள் தப்பி ஓடியுள்ளனர். உயிரிழந்த ரவுடி வல்லரசு உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து தலையில் 28 தையல்கள் போடப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காவலர் பவுன்ராஜ் கூடுதல் ஆணையர் தினகரன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து.. பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பவுன்ராஜ் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்பட்டார்…

மேலும் தலையில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காவலர் பவுன்ராஜை சந்தித்து.. உடல்நலம் குறித்து விசாரித்தார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

ரவுடி வல்லரசு என்கவுன்டர் தொடர்பாக விசாரணை அதிகாரியாக பொன்னேரி 2-ம் நீதிமன்ற நடுவர் விஜயலட்சுமி நியமனம்.

நமது நிருபர்