Sun. Oct 6th, 2024

RTI தரும் அதிர்ச்சி தகவல் | தமிழகத்தில் தீண்டாமை உள்ள மாவட்டங்கள் |

இன்றும் கடைபிடிக்கப்படும் தீண்டாமை | அதிர்ச்சி தகவல்.! |

தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்றும் கடைபிடிக்கப்படும் தீண்டாமை என விளக்கம் அளித்த தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அதிர்ச்சி தகவல்.!

தமிழகத்திலேயே மிக அதிகமாக தீண்டாமைக் கொடுமைகள் நடக்கும் மாவட்டம் திருவாரூர்.,  இங்கு தான் சமூக நீதி காவலர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பலமுறை போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது கூடுதல் தகவல்..

சமத்துவ சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் 94 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் தீண்டாமை மிக அதிகமாக கடைப்பிடிக்க படுகின்றன என்று., தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.. தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் உள்ள சுமார் 646 கிராமங்களில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் தலை விரித்தாடுகின்றன. இவற்றில் மிகவும் அதிகமாக சமூகநீதிக் காவலர் கலைஞர் கருணாநிதி அவர்கள் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருவாரூர் மாவட்டம் என்பது கொடுமையின் உச்சம்.

தலித் சமூக செயல்பாட்டாளர்களின் இயக்கமான இளைஞர்கள் சமூக விழிப்புணர்வு மையம் (SASY) சார்பாக 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில். தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 76 தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்கள் அனுப்பப்பட்டது. இதில் 20 மாவட்டங்களில் இருந்து மட்டுமே இதுவரை பதில் கிடைத்து இருக்கின்றன மேலும்..

இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கியமாக மூன்று கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது…

1.தமிழகத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் கிராமங்கள்.

2.சாதீ அடிப்படையிலான ஒடுக்கு முறைகள்.

3.தீண்டாமையை தடுப்பதற்கு மாவட்ட ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகள் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டன.

கேட்கப்பட்ட தகவலில் மிகவும் அதிகமாக திருவாரூர் மாவட்டத்தில் 158= கிராமங்களும் சிவகங்கை (49), ராமநாதபுரம் (45), தேனி (40), கடலூர் (38), கிருஷ்ணகிரி (35), நாமக்கல் (35), தூத்துக்குடி (34) மற்றும் விழுப்புரத்தில் (32) கிராமங்களும், சாதீய அடக்கு முறைகளால் மிகவும் பதட்டமான பகுதிகளாக கடலூரில் 14 கிராமங்களும் சேலம் (8) திருவாரூர் (14)  கிராமங்களும் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்கள் சமூக விழிப்புணர்வு மையத்தால் (SASY) பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 20 மாவட்டங்களில் கடலூர் மற்றும் தர்மபுரியில் மட்டுமே தீண்டாமை கொடுமையை கண்டறிவதற்கும்.அதனால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குரிய நிவாரணம் பெற்றுத் தருவதற்கான அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்கள், இந்திய அரசியலமைப்பு சட்டம் தடை செய்திருக்கக்கூடிய தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள் மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்தே இருப்பதாலும், பெரும்பாலான விளை நிலங்கள் ஆதிக்க சாதியினர் இடத்தில் இருப்பதாலும்.. இத்தகைய நிலப்பிரபுக்களை சார்ந்து விவசாயக் கூலிகள் இருப்பதால்… அவர்கள் மீது இப்படிப்பட்ட சாதி ரீதியிலான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கலைஞர் கருணாநிதி போன்ற சமூக நீதி காவலர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தாலும்…சாதீய அடக்கு முறைகளை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.!

தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமை வன்கொடுமை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் 25 நபர்களைக் கொண்டு விழிக்கண் குழு (SVMC) நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக மாநில முதல்வர் செயல்படுகிறார்…
குழு அமைக்கப்பட்ட கடந்த 16 ஆண்டுகளில் முதலமைச்சர் தலைமையில் 42 கூட்டங்கள் நடைபெற்று இருக்க வேண்டும்..!ஆனால் இதுவரை மூன்று கூட்டங்கள் மட்டுமே நடைபெற்று ருக்கின்றன.!! இதில் திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஒரு கூட்டமும், அதிமுக ஆட்சியில் செல்வி ஜெயலலிதா தலைமையில் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடந்து  இருக்கின்றன.! சட்டவிதிகளின்படி மாவட்ட அளவிலான விழிக்கண் குழு (DVMC) மாத மாதம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அதுவும் சரிவர நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.

சாதி அடிப்படையில் தீண்டாமை கடைப்பிடிப்பவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பிரிவு 16-ன் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீண்டாமை கொடுமையில் இருந்து சிறிதேனும் நிவாரணம் கிடைக்கும் அரசும்… அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்..

தோழர் ம.முகமது கவுஸ்.