Sun. Oct 6th, 2024

இருக்கு…! ஆனா இல்ல..! | நம்ம அரசு இணையதளம் | டிஜிட்டல் இந்தியா..! |

ஜூன் 10-2019

டிஜிட்டல் இந்தியாவில் அப்டேட் ஆகாத அரசுத்துறைகள். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில்  செயல்படக்கூடிய முதியோர் இல்லங்களும், குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் காப்பகங்களுக்கும் மேலும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறை விதிப்படி சட்டங்கள் ஏதேனும் விதித்து இருந்தால்.? தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 ன் படி விளக்கம் அளிக்கும்படி கேட்டதற்கு.. நமக்கு சமூக நல ஆணையரகம் தந்த பதில் கடிதத்தில் (www.tnsocialwelfare.org) இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.என்று விளக்கம் அளித்துள்ளனர்.

விளக்கத்தை தேடி அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை தேடினால் நம்ம வடிவேலு பாணியில் இணையதளத்தை காணவில்லை அதற்கு பதிலாக வெள்ளையா முகப்பு பக்கம் மட்டுமே தெரிகிறது COMING SOON என்று மட்டுமே வருகிறது இது தான் டிஜிட்டல் இந்தியா அசுர வளர்ச்சி அப்டேட் ஆகாத அரசு துறையின் இணையதளம்….

நடவடிக்கை எடுப்பார்களா?