Thu. Jan 9th, 2025

கூலி தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக | உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை |

ஜூன், 08-2019

சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் ராம்குமார்(51). கூலி வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊர் கேரளா மாநிலம். ராம்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது மனைவியுடன் வில்லிவாக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் 7ம் தேதி காலை ராம்குமார் வேலைக்கு செல்ல வேண்டும் என்று மனைவி அவரை எழுப்பி உள்ளார். ஆனால் ராம்குமார்… மூச்சு பேச்சு இல்லாததை பார்த்து பயந்து ராம்குமாரின் மனைவி… 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். அங்கு வந்த மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு ராம்குமார் இறந்து விட்டார் என கூறினார். உடனே ராம்குமார் உறவினர்கள் சடலத்தை எடுத்து கொண்டு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து ராம்குமார் சாவில் மர்மம் இருப்பதாக முற்றுகையில் ஈடுபட்டனர். பின்பு வில்லிவாக்கம் போலீசார் ராம்குமார் உறவினர்களின் புகாரை வாங்கி கொண்டு வழக்கு பதிவு செய்து ராம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கிழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலத்தை கொண்டு வந்து வில்லிவாக்கம் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் அப்பகுதில் பரப்பரப்பு ஏற்பட்டது..

நமது நிருபர்