Wed. Jan 8th, 2025

செல்போன் கடைகளில் செல்போன்கள் திருடிய வாலிபர் கைது…

ஜூன், 07-2019…,

சென்னை, மோர் மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஒட்டுனர் அந்தோனி (எ) ஜோசப் (25). இவருடைய சொந்த ஊர் மதுரை மாட்டு தாவணி. அந்தோனி தன்னுடைய ஆடம்பர செலவுக்காக கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் அதிகமாக வரும் கடைகளில் செல்போன் வாங்குவது போல் நடித்து செல்போன் திருடி வந்துள்ளார். மேலும் அண்ணா வளைவு பகுதியில் உள்ள மூன்று செல்போன் கடைகளில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

நான்காவது பூர்வீகா செல்போன் கடையில் செல்போன் திருடும் போது சுதாரித்து கொண்ட கடை ஊழியர்… அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும்… சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை போலீசார்… அந்தோனியை கைது செய்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து… புழல் சிறையில் அடைத்தனர்.

நமது நிருபர்