சூப்பர் மார்க்கெட்டில் சூறையாடிய வழக்கில் ஒருவர் கைது | 24 பேர் தலைமறைவு |
ஜூன், 06-2019…,
சூப்பர் மார்க்கெட்டில் சூறையாடிய வழக்கில் ஒருவர் கைது.. மேலும் 24 ரவுடிகள் தலைமறைவு.
சென்னை அண்ணா நகர் மேற்கு, 18வது மெயின் ரோடு பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருபவர் செந்தில் முருகன்(42). இவர் கடந்த 3ம் தேதி அன்று திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சூப்பர் மார்க்கெட்டில் ஆண்கள், பெண்கள் என இருபலரும் வேலை செய்து வருகின்றனர். மேலும் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒரு பெண்ணிடம், ரஞ்சித்குமார் என்ற வாலிபர் காதலிக்க சொல்லி கடந்த ஐந்து நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார் என, அந்த இளம்பெண் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் மேனேஜர் கார்த்திக்கிடம் கூறியுள்ளார். கடந்த 3 ஆம் தேதி அன்று ரஞ்சித்குமார் அந்த பெண்ணிடம் மறுபடியும் காதலிக்க சொல்லி தகராறு செய்து கொண்டு இருந்தபோது… அங்கு வந்த மேனேஜர் கார்த்திக்… எதற்காக தகராறு செய்கிறீர்கள் என்று ரஞ்சித்குமாரிடம் கேட்டு உள்ளார். அதற்கு ரஞ்சித்குமார், நீ எதற்காக கேட்கிறாய்? என்று கேட்டு கார்த்திக்கை தாக்கியள்ளார். அதன்பின் இருவரும் சூப்பர் மார்க்கெட்டில் மாறி மாறி அடித்து கொண்டனர்.
சிறிது நேரத்தில் ரஞ்சித்குமார் 25 பேர் கொண்ட ரவுடி கும்பலை அழைத்து வந்து சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தார். மேலும் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையை எடுத்து மேனேஜர் கார்த்திக் என்பவரை தாக்கி விட்டு, கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.54 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் சென்று விட்டதாகவும், கத்தியை காட்டி சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொதுமக்களை மிரட்டி விட்டு சென்றதாக தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செந்தில் முருகன் என்பவர் திருமங்கலம்
போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில்… போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை
தேடி வந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் மேலும் 24 பேர் தலைமறைவு. அவர்களை தேடி வருவதாக திருமங்கலம் போலீசார் தெரிவிக்கின்றனர்…
நமது நிருபர்