Mon. Jan 6th, 2025

நடுரோட்டில் வாலிபர் ஒருவரை | தாக்கிய மூன்று வாலிபர்கள் தலைமறைவு |

ஜூன் 06-2019

நடுரோட்டில் வாலிபர் ஒருவரை… தாக்கிய மூன்று வாலிபர்கள் தலைமறைவு… தலையில் 10 தையில். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

சென்னை, மாங்காடு சேர்ந்த அன்பரசன் (25) இவர் எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறவர். நேற்று அண்ணாநகர் A. H.பிளாக் 5வது தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் அன்பரசன் செல்லும் போது… அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அன்பரசனை வழிமறித்து நடுரோட்டில் சரமாரியாக தாக்கினார்கள். அருகில் இருந்த பொது மக்கள் பயந்து ஒட்டம் பிடித்தனர். உடனே அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அன்பரசன் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அன்பரசன் தலையில் 10 தையில் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் அன்பரசனை எதற்காக வழிமறித்து அடித்தார்களா? அடித்த மர்ம நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்…

நமது நிருபர்