குடிபோதையில் வாலிபரை அடித்த | கார் ஒட்டுனர் கைது |
ஜூன் 06-2019…,1
சென்னை, அமைந்தகரை டி.பி. கார்டன் 6வது தெருவை சேர்ந்த முருகன்(40). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு அமைந்தகரை டி.பி.கார்டன் கோயில் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியாக குடிபோதையில் வந்த அதே பகுதியே சேர்ந்த சதீஷ் (எ) ஜில்லா சதீஷ் (31) (கார் ஓட்டுனர்)…. தூங்கிக்கொண்டிருந்த முருகனை எழுப்பி தகராறு செய்துள்ளார். திடீரென்று சதீஷ் கல்லை எடுத்து முருகன் தலையில் ஓங்கி அடித்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த முருகனை அருகே உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனே அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை போலீசார் சதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்