சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது..
ஜூன் 3-2019…,
சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்கோ சட்டத்தில் கைது..
சென்னை, சூளைமேடு பகுதியை சேர்ந்த அருண்(23). இவர் தனியார் கல்லுரியில் பி.காம் படித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தனியாக அழைத்து சென்று தகாத முறையில் நடந்ததால் சிறுமி தற்போது கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போல்சார்… சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவனை கைது செய்து விசாரணை செய்ததில் சிறுமியை கர்ப்பமாக்கியத்தை அருண் ஒப்பு கொண்டார்.
விசாரணைக்கு பின்னர் போக்சோ சட்டத்தில் கைது செய்து அருணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
நமது நிருபர்