Sat. Dec 21st, 2024

குப்பை தொட்டியில் கொட்டும் மாமிச கழிவுகளால் துர்நாற்றம்…

ஜூன், 3-2019

குப்பை தொட்டியில் கொட்டும் மாமிச கழிவுகளால் துர்நாற்றம்…

ஆலந்தூர், மே,3 -சென்னை மாநகராட்சி 177 வது வார்டுக்குட்பட்ட ஆதம்பாக்கம் சாஸ்திரி, நகர் 4வது தெருவில் ஆரம்பசுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகே மாநகராட்சி சார்பாக குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பகுதியில் இறைச்சி கடை நடத்துபவர்கள் மாமிச கழிவுகளை இதில் கொட்டிவிடுகிறார்கள். இந்த கழிவுகளை லாரிகள் மூலம் ஐடுராலிக் கருவிமூலம்மூலம் அழுத்தும் போது மாசிச கழிவுகளில் இருந்து ரத்தம் வெளியேறி ஆறுபோல சாலைகளில் ஓடுகிறது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யாமல் சென்றுவிடுகின்றன. இதனால் இந்த ரத்தத்தை ஈக்கள், கொசுக்கள் மொய்க்க தொடங்கி விடுகின்றன.

மேலும் இந்த ரத்தம் உறைய… உறைய… ரத்தவாடை காற்றில் பரவி துர்நாற்கம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பினி தாய்மார்கள்… மூக்கை மூடியபடி செல்லும் நிலை உள்ளது.

மேலும் இந்த மருத்துவ மனையை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் இந்த மாமிச ரத்தத்தை குடிக்கும் கொசுக்களும் ஈக்களும் இரவுதேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து கடிப்பதுடன் நோய்களையும் பரப்பி விட்டு செல்கின்றன. மருத்துவ மனைக்கு வரும் கர்ப்பினி தாய்மார்களுக்கும், பொதுமக்களுக்கும் நோய் பரவுவதை தடுக்க நடவடிககை எடுக்கும்மாறு சம்மந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகளிடம்.. அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது..

நமது நிருபர்