Sat. Dec 21st, 2024

TEMPO வண்டிகளை திருடிய கும்பல் கைது |

ஜூன் 3-2019…,

TEMPO வண்டிகளை திருடிய கும்பல் கைது |

கடந்த 21ஆம் தேதி சண்முகபுரம்.. புதுச்சேரியை சேர்ந்த பெருமாள்(35) என்பவர் மேட்டுபாளையம் காவல் நிலையத்தில் பிப்டிக் மெயின் ரோடு அருகே நிறுத்தி வைத்திருந்த தனது TN20BE 6172 எண் கொண்ட டெம்ப்போ டிராவலர் வண்டியை யாரோ அடையாளம் தெரியாத சிலர் திருடி சென்றுவிட்டதாக புகார் கொடுத்ததன் பேரில்… வழக்கு பதிவு செய்து மேட்டுபாளையம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்…

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ்(23), அஷோக்(22), கோயம்புத்தூர் காந்திபுரத்தை சேர்ந்த பிரபு(36) மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் @ விமல்(23) ஆகிய 4 குற்றவாளிகளை பிடித்து கைது செய்தனர்.

பிடிப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து TN20BE 6172 என்ற கொண்ட 1 டெம்ப்போ டிராவலர், PY01BF 62321 என்ற எண் கொண்ட டாட்டா ஏஸ் வண்டியையும், மற்றும் TN42AC 1689 என்ற எண் கொண்ட கோல்டு நிற டாட்டா ஏஸ் வண்டியையும் போலீசார் கைபற்றினர்.

கைபற்றப்பட்ட வண்டிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 12 லட்சம். மேலும் இந்த 4 குற்றவாளிகள் மீது ஏற்கனவே லாஸ்பேட்டை தன்வந்திரி நகர் மற்றும் முதலியார்பேட்டை காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

நிருபர் ராம்