கஞ்சாவிற்காக நண்பனை கொலை செய்த இளைஞர்கள்..!
ஜீன் 2-2019
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவகாஞ்சி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வெள்ள குளம் என்ற பகுதியில் கஞ்சா கேட்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நவீன்(16) என்ற சிறுவனை மற்ற நண்பர்கள் கூட்டு கொலை செய்து விட்டு தலைமறைவான குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் உதவி ஆய்வாளர் கிஷோர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து 24 மணி நேரத்திற்குள் முதல் 2 குற்றவாளிகளை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கிடைக்க பெற்ற தகவலின்படி மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த தனுஷ்கோடி(17), சூர்யா(18), குணசேகரன்(17), அரிகிருஷ்ணன்(18), இராமசாமி(22), ஜோதிபிரகாஷ்(18), இராதா(17) ஆகிய 6 பேரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதால் போலீசார்… அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நிருபர் ராம்