Fri. Dec 20th, 2024

திருநங்கையை கட்டையால் தாக்கிய மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்…

ஜீன், 2-2019…,

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கை அனுமதி. சூளைேமேடு நமச்சிவாயபுரம் சேர்ந்த அனிதா(21). இவர் கடந்த 31ம் தேதி அன்று நள்ளிரவு 1:30 மணி அளவில் அமைந்தகரை நெல்சன் மாணிக்கும் ரோடு, ரயில்வே காலணி முதல் தெருவில் திருநங்கைகளான அனிதா, பாரதி, சாதனா ஆகியோர் சாலையில் நடந்து செல்லும் போது… அந்த வழியாக காரில் வந்த மர்ம கும்பல் அனித்தாவை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

உடனே திருநங்கை பாரதி… காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயங்கிய நிலையில் இருந்த திருநங்கை அனிதாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து… நேற்று மாலை அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த அமைந்தகரை போலீசார்… சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்