ஆத்மயோகா பப்ளிகேஷன்ஸ் | முதல் நூல் வெளியீட்டு விழா|
ஆத்மயோகா பப்ளிகேஷன்ஸ் முதல் படைப்பு தூங்கா நினைவுகள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் ஆத்மயோகா பப்ளிகேசன்ஸ் சார்பில் முதல் படைப்பான கவிதாயினி ஜெர்ரி அவர்கள் எழுதிய தூங்கா நினைவுகள் என்ற கவிதை நூல் வெளியிட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர்.சுந்தரவள்ளி அவர்கள் நூலை வெளியிட்டு பேசினார்.வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர் தோழர்.முகமது கவுஸ் அவர்கள் நூலை பெற்றுக்கொண்டார்.
மூன் டிவி.,யின் செய்தி ஆசிரியர் திரு.ஆர்.ரங்கபாஷ்யம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மூத்த ஊடகவியலாளர் திரு.டி.எம்.விஸ்வநாத் (எ) விஷ்வா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கவிஞர்.கலைஞானி அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்..
தேசிய ஊடகவியலாளர் நல சங்கத்தின் துணைத் தலைவர் திரு.வி.எஸ் ராமன் வெளியீட்டார் குறித்து பேசினர்.
தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் சங்கத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.ஸ்பைடர் சீனிவாசன், கண்ணோட்டம் நாளிதழின் ஆசிரியர் இரா.சண்முகம், தமிழன் டி.வி., சங்கரன், தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் சங்க துணைத் தலைவரும் மூத்த நிருபருமான ராஜன்பாபு, மூன் டி.வி., குமரேசன், நிருபர்கள் திருத்தணி வினோத், ராமமூர்த்தி, சினிமா உதவி இயக்குனர்கள் சக்திவேல், ஷியாம், குமரன், தீபக்மற்றும் பேராண்மை நியூஸ் நிருபர்கள், கோவிந்தராஜன், பார்த்தசாரதி உட்பட பலர் நிகழ்வுகள் கலந்துக் கொண்டனர். நிகழ்வின் முடிவில் க.முரளி நன்றியுரை ஆற்றினார்.
நன்றி ச.விமலேஷ்வரன்
பத்திரிகையாளன்