Fri. Dec 20th, 2024

குடிநீர் தொட்டி உடைந்து |தொட்டிக்குள் நாய் விழுந்து பலி.! |

ஜீன் 2,2019

வில்லிவாக்கத்தில் குடிநீர் தொட்டி உடைந்து தொட்டிக்குள் நாய் விழுந்து பலி… துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள்… சாலை மறியலில் ஈடுபட்டத்தால் போலீசார் குவிப்பு.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் சுமார் 2,000 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் தண்ணிர் தொட்டி சிமெண்ட் தளத்தால் கட்டியுள்ளனர். இந்த குடிநீர் தொட்டி மேல் தளம் உடைந்து 6 மாதங்களாகியும் சறி செய்யவில்லை. இந்த நிலையில் குடிநீர் தொட்டியின் மீது படுத்திருந்த தெரு நாய் ஒன்று… தீடீர் என்று தவறி விழுந்ததில், மூச்சு திணறி இருந்ததால் துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. இதனால் குடிநீர் அலுவலத்தை அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு… சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வாரிய உதவி செயற் பொறியாளர் சாகதேவன் மற்றும் வில்லிவாக்கம் போலீசார் அப்பகுதி மக்களிடம் 24 மணி நேரத்தில் குடிநீர் தோட்டியை சீர் செய்து தருகிறோம்.. என்று சொல்லி பேச்சு வார்த்தை நடத்தியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது…

நமது நிருபர்