Fri. Dec 20th, 2024

கோயம்பேடு பஸ் நிலையம்| 1 கோடி மதிப்புடைய வளையல்கள் | கொள்ளையடித்த 2 பேர் கைது |

ஜீன் , 02-2019

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வியாபாரியிடம் ஒரு கோடி மதிப்பிலான 23 வைர வளையல்களை கொள்ளை அடித்த வழக்கில் இரண்டு பேரை கைது செய்து விசாரணை.

மும்பையைச் சேர்ந்த தாராசந் வயது 55. இவர் திருச்சியில் அலுவலகம் வைத்துள்ளார். இவர் வைர வளையல் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 13ம் தேதி அன்று திருச்சியிலிருந்து வைர வளையல் ஆர்டர் கொடுக்க கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் வந்து… பேருந்திலிருந்து இறங்கி… அவருடைய பையை திறந்து பார்க்கும் போது, பையில் வைத்திருந்த ஒரு கோடி மதிப்பிலான 23 வைர வளையல்கள் கொள்ளை அடித்தது தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்தார். பின்பு தாராசந் கோயம்பேடு காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணன், கருப்பையா இருவரையும் கைது செய்து விசரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்