30 – ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை | லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது |
ஜீன், 01-2019..,
அண்ணாநகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் 30- ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா (51). இவருக்கு சொந்தமான இடத்தில் 300 சதுர அடியில் மின்கம்பம் உள்ளதாக… அண்ணாநகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர் மணிமாறன் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகாரை வாங்கிய மனிமாறன்… மின்கம்பத்தை எடுப்பதற்கு கருப்பையாவிடம் 50,000 ரூபாய் பணம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு கருப்பையா முன் பணமாக 20,000 ரூபாய் மணிமாறனிடம் இடம் கொடுத்தும் உள்ளார்.
மீதம் 30,000 கருப்பையா கொடுக்கவில்லை என்று கருப்பையாவின் வேலையை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் மணிமாறன். இதில் நொந்து போன கருப்பையா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணி அளவில் DSP லவக்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் திடீரென்று மின்வாரிய அலுவலகத்தில் புகுந்தனர். அங்கு கருப்பையாவிடம் மீதி பணத்தை மணிமாறன் 30,000 வாங்கும் போது அருகில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
கைது செய்த உதவி செயற்பொறியாளர் மணிமாறன் என்பவரிடம்… லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி லவக்குமார் விசாரணை மேற்கொண்டு, பின்பு மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் மணிமாறனை கைது செய்தனர். இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது…
நமது நிருபர்