Wed. Mar 12th, 2025

தலைமறைவாகிவிட்ட பொது தகவல் அலுவலர் | வெல்ஃபேர் கட்சி குற்றச்சாட்டு |

மே, 30 -2019…,

சென்னை குடிநீர் வாரியத்தில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை ஆய்வு செய்வதற்காக வெல்ஃபேர் கட்சியின் சார்பாக சென்னை குடிநீர் வாரிய பகுதி-8 பொது தகவல் அலுவலருக்கு நேரில் ஆய்வு செய்ய தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் மனு செய்து இருந்தோம்.

அதனடிப்படையில் இன்று 30.5.2019 காலை 9.00 மணி முதல் 1.00  மணி வரை ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்துவிட்டு பொது தகவல் அலுவலர் நாங்கள் வந்ததை கண்டு சிறிது நேரத்திற்குள்ளாகவே அங்கு இருந்து தலைமறைவாகி விட்டார்.

அத்துடன் 4 மணி நேர காத்திருப்புக்கு பின்பும் உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காது கால விரயம் செய்ததுடன் எங்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டார்கள்.

கடமையை செய்யத் தவறிய பொது தகவல் அலுவலர் மீது மாநில தகவல் ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெல்ஃபேர் பார்ட்டி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
ம.முகமது கவுஸ்
மாநில செயலாளர்
வெல்ஃபேர் கட்சி
90030 18656