ஐ.சி.எப் ரயில்வே போலீஸ் குடியிருப்பில் | இருசக்கர வாகனம் திருடிய மூன்று சிறுவர்கள் கைது |
மே, 29-2019..,
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மூன்று பேர் நேற்று இரவு ஐ.சி.எப் ரயில்வே போலீஸ் குடியிருப்பில் புகுந்து… இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு ஐ.சி.எப் வழியாக வரும் போது ரோந்து வாகனத்தில் வந்த ஐ.சி.எப் போலீசார் மூன்று சிறுவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களை ஐ.சி.எப் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில்… ரயில்வே குடியிருப்பில் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் மூன்று சிறுவர்களிடம் வேறு எந்த பகுதிகளில் எல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என ஐ.சி.எப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஐ.சி.எப் ரயில்வே காவலர் லாசர் தனது வாகனத்தை திருடியதாக ஐ.சி.எப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
நமது நிருபர்