சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்…!
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில்
மார்கழி ஆருத்ரா மஹோத்ஸவ கொடியேற்ற நிகழ்ச்சி உத்ஸவ ஆச்சாரியார் நடராஜ தீக்ஷிதர் கொடியேற்றி பூஜைகள் செய்து ஆருத்ராவிழா துவங்கியது துவங்கியது அதைத் தொடர்ந்து உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும் மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும் உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர் ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் – நாதஸ்வர இசை முழங்க, வேத பாராயணம் முழங்கிட வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள் ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்கள் இன்று மார்கழி திருவிழா கொடி ஏற்றப்பட்டது