வாலிபரிடம் செயின், பிரேஸ்லெட் | பறித்து சென்ற இருவர் கைது | இருவர் தலைமறைவு |
மே, 29-2019
தஞ்சாவூரை சேர்ந்த சத்தியராஜ்(30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர்கள் அதே ஊரை சேர்ந்த மணி பாரதி(30), கோபிநாத்(30). இவர்கள் உட்பட நாலு பேர் சென்னை அண்ணாநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். கடந்த 19 ஆம் தேதி அன்று சத்தியராஜ், மணிபாரதி,கோபிநாத் ஆகிய இவர்களுக்குள் பிசினஸ் விஷயமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிபாரதி கோபிநாத் உட்பட இன்னும் இரண்டு நபர்கள் சேர்ந்து சத்யராஜ் என்பவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கி… அவரிடமிருந்த விலை மதிப்புள்ள செல்போன், சத்யராஜ் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மற்று, பிரேஸ்லெட் உள்ளிட்ட நகைகளை பறித்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து சத்யராஜ் கடந்த 20ஆம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் போலீசார் அண்ணா நகரில் பதுங்கி இருந்த மணிபாரதி மற்றும் கோபிநாத்தை நேற்று நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்த இருவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் தலைமறைவாகி உள்ளதாகவும்.. அவர்களை போலீசார் தேடி வருவதாக தகவல்…!!?!!
நமது நிருபர்