Sat. Dec 21st, 2024

பைக் திருடர்கள் இருவர் கண்ணகி நகரில் கைது |

மே, 29-2019..,

காரப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை கடந்த 28ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு… காலையில் வந்து பார்த்தபோது தனது வாகனத்தை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. உடனே அவர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரனை நடத்திய
போலீசார்… நீலாங்கரை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) மற்றும் அவரது நண்பர் ஆம்பூர் தண்டபாணி (32) இருவரும் கூட்டு சேர்ந்து திருடியது தெரியவர… இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்..

நமது நிருபர்