Sat. Dec 21st, 2024

பெண் காவலர் தற்கொலை முயற்சி | சிகிச்சை பலனின்றி இறப்பு |

மே, 28-2019…,

தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த.. தலைமை காவலர் …

சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் அருணா. வயது 44. இவரது கணவர் பெயர் ஜெயச்சந்திரன். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகளோடு டி பி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்…

பெற்றோர் அண்ணன் என அனைவரும் இறந்ததால் மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் காவலர் குடியிருப்பில் தூக்கு மாட்டிக்கொண்ட அவரை.. கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது. ஆனால் இன்று விடியற்காலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்…

இறந்த உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு… பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அருணாவின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் சோழவரம் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்