மாஞ்சா நூல் கழுத்தறுத்து | பைக்கில் சென்றவர் காயம் |
மே, 28-2019…,
பெரம்பூர்: வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்தவர் சேர்மகனி (35). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்றய முன்தினம் மாலை வியாசர்பாடியில் இருந்து தண்டையார்பேட்டைக்கு பைக்கில் சென்றார்.
வைத்தியநாதன் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென பறந்து வந்த மாஞ்சா நூல் அவருடைய கழுத்தை அறுத்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு 4 தையல் போடப்பட்டது.
இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் சென்னையில் சோதனை நடத்தி, மாஞ்சா நூல் மற்றும் பட்டங்களை பறிமுதல் செய்தனர். தற்போது, மீண்டும் மாஞ்சா நூல் கழுத்தறுத்து ஒருவர் படுகாயமடைந்துள்ளதால், காவல்துறையினர் இதை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது…
நமது நிருபர்