Fri. Dec 20th, 2024

உடல் துண்டாகும் நிலையில் | பிரபல ரவுடியின் மகன் வெட்டிக் கொலை |

பிரபல ரவுடி மகன் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொலை கஞ்சா போதையில் நடந்ததா என விசாரணை நடந்து வருகிறது.புது வண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர், அம்மனியம்மன் தோட்டம், நான்காவது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், இவரின் மகன் தினேஷ் (25), இவர், கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது, மேலும், கஞ்சா குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும் தெரிகிறது, இவருக்கு திருமணம் ஆகி விட்டது, மனைவி கர்ப்பமாக உள்ளார்..

இந்த நிலையில், நேற்று மாலை , அதே பகுதி, அம்மனியம்மன் தோட்டம், 5 வது தெருவில், தினேஷ் ரத்த வெள்ளத்தில் பிஂணமாக கிடந்தார், அவரை வெட்டிக்கொலை செய்திருந்தனர், உடல்கள் துண்டாகி போகும் நிலையில், தினேஷ் பிணமாக கிடந்தார். தகவல் கிடைத்து, வண்ணாரப்பேட்டை துணை கமிஷ்னர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர், அவர்கள் அங்கு விசாரணை நடத்தி, தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் கொலை குறித்து விசாரணை நடத்தினர், அதில், தினேஷ் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று, புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இருப்பதும், அவரை, 5 பேர் கொண்ட கும்பல்,சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததும் தெரிய வந்தது. தினேசுக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் உள்ளதாகவும், இதனால், கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்..

கொல்லப்பட்ட தினேஷின் தந்தை பிரகாஷ், அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் மேலும் பிரகாஷ் மீது கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன புழல், செங்குன்றம் பகுதிகளில், பெண் வேடமிட்டு, லாரிகளை மடக்கி, டிரைவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்வதில், பிரகாஷ் கை தேர்ந்தவர் எனவும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு,பிரகாஷ் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது,தற்போது அவரின் மகனையும், ஒரு கும்பல் வெறித்தனமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

நமது நிருபர்