சாக்கடைமேல் அமைந்திருக்கும் மாமிசக் கடைகள்..!
மே, 27-2019..,
திருத்தணி மேட்டு தெரு சுகாதாரமற்ற மாமிச கடைகளின் அட்டகாசம். நடவடிக்கை எடுக்க தயங்கும் திருத்தணி நகராட்சி நிர்வாகம்..
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு பகுதிக்கு உட்பட்ட மேட்டு தெரு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை… இந்த பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கால்வாய் மீது சுகாதாரமற்ற மாமிச கடைகள், மீன் கடைகள், துரித உணவு ஹோட்டல்கள் அமைந்துள்ளது. அக்கடைகளின் அட்டகாசத்தால் கழிவுநீர் கால்வாயில் உள்ள ஈ மற்றும் கொசுக்கள் கால்வாயில் இருந்து பலநாள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருக்கும் மீன், கறிக் கோழி மீது மொய்க்கிறது. அது கடைகளில் சுகாதாரமற்ற முறையில் அப்படியே விற்பனையும் செய்யப்படுகிறது. ஆனால் இன்றுவரை அதை தடுக்க நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.!
மேலும் மேட்டு தெரு ரயில்வே சிக்னல் போடுக்கு பின்புறம் உள்ள மீன் கடைகள் நகராட்சிக்கு சொந்தமான இடம். ஏன் ஆக்கிரமிப்பை எடுக்கவும் முன் வருவதில்லை.? காரணம் என்ன.? நகராட்சியில் வேலை செய்யும் அதிகாரிகள் ஏன் இந்தக் கடைகளுக்கு துணை போகிறார்கள்.? மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ்களுக்கு இந்த கடைகளால் இடையூறுகளும் தொல்லைகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மிக முக்கிய ரயில்வே கேட் பகுதியாகும். முக்கியமான கோயில்களுக்கு மாமிசம் உண்ணாத நபர்கள் கடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம். ஏன்… இந்தக் கடைகளை அப்புறப்படுத்தி நகராட்சி பல லட்சம் செலவு செய்து வீணாக உள்ள அனுமந்தபுரம் மாமிசக் கடை பகுதிக்கு மாற்றம் செய்ய முன்வருவதில்லை.?
நகராட்சி கழிவுநீர் கால்வாய் மீது உள்ள மாமிச கடைகள், ஹோட்டல்கள் அப்புறப்படுத்தப்படுமா.? திருத்தணியில் உள்ள உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நகராட்சிக்கு உள்ளேயே சுகாதாரமற்ற முறையில் நுழைவாயிலில் துர்நாற்றங்கள் இடது புறம் பார்க் ஒட்டிய பகுதியில் பொதுப் பார்க்கிங் வசதி ஏரியாவான நகராட்சி வளாகம்… மேட்டு தெரு மாமிச கடைகள் ஆந்திராவிலிருந்து வரவேற்கப்படும் கறிக்கோழிகள், மீன் கடைகள் ஆகிய மொத்த கழிவுகளும் மொத்தமாக திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெரு வட்டாட்சியர் குடியிருப்பு பகுதி அருகில்… வேளாண்மைத் துறை அலுவலகம் அருகில்… வருவாய் அலுவலர் அலுவலகம் அருகில் இந்த மொத்த மாமிச குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் அருகிலுள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த மாமிச குப்பைகளால் பெரிதும் பாதிப்படைய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது..
ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்.? அதிரடியாக இந்த மாமிச கடைகள் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்களையும் பொதுமக்களையும் காப்பாற்றுவார்களா திருத்தணி நகராட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் அல்லது பல நோய்கள் வரும் வரை காத்திருப்பார்களா..? பொறுத்திருந்து பார்ப்போம்…!!!!
நமது நிருபர்