Sun. Oct 6th, 2024

அதிர்ச்சியில் அமமுகவினர்…

மே, 25-2019…,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கு கட்சியின் கட்டமைப்பு ஒரு காரணம் ஆகும்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த ஓட்டு வங்கியை பெறவில்லை ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஆறு சட்டமன்ற தொகுதி ஆகும் ஒரு தொகுதிக்கு நான்கு ஒன்றியம் இருபத்து நான்கு ஒன்றியத்திற்கு 432 ஊராட்சிகள் என ஒரு ஊராட்சிக்கு குறைந்தது 5 முதல் 8 கிளைகள். சராசரியாக 6 கிளைகள் உள்ளன.

432 x 6 = 2592 கிளைகள் ஆகும்.
கிளைக்கு 33 உறுப்பினர்கள் எனில்
2592 x 33 = 85536 உறுப்பினர்கள் உள்ளனர். ஆக ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு பொது மக்கள் இல்லாமல் நிர்வாகிகள் மட்டும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் 85536 நபர்கள் உள்ளனர்.

மேலும் மாவட்ட நிர்வாகிகள் 12 நபர்கள். சார்பு அணி நிர்வாகிகள் – 16 x 12 = 192 நபர்கள் உள்ளனர்.

24 ஒன்றிய நிர்வாகிகள் 24 x 12 = 288 நபர்கள்.

சார்பு அணிகள் 16 x 12 x 24 = 6912 நபர்கள்.
432 ஊராட்சி செயலாளர்கள் 432 நபர்கள்.

2592 கிளைநிர்வாகிகள் x 12 – 31104 நபர்கள்.

2592 x 33 உறுப்பினர்கள் – 85536. ஒரு பார்லிமென்ட் தொகுதியின் மொத்த அமமுக நிர்வாகிகள் – 1,24,476 நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வாக்கு வங்கி என்ன ஆனது அஇஅதிமுக உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் டிடிவி கூறிவருகிறார். அது மட்டுமின்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் ஒவ்வொரு பூத்துக்கும் 40 விழுக்காடு வாக்காளர்களுக்கு ரூபாய் 200 வீதம் பட்டுவாடா செய்தது கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் வாக்குகளும் பதிவாகவில்லை. 40 சதவீத வாக்காளர்களுக்கு கொடுத்ததும் ஓட்டாக பதிவாகவில்லை இதனால் வேட்பாளர்கள் உச்ச பட்ச விரக்தியில் இருக்கிறார்கள்.

டிடிவி தினகரனின் அரித்மேட்டிக் கால்குலேஷன் எந்த இடத்தில் தவறானது என்பதை நிர்வாகிகள் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட நிர்வாகிகள் கட்டமைப்பு படி நிர்வாகிகளை நியமிக்க வில்லையா தேர்தல் நேரத்தில் 40 விழுக்காடு பணம் பட்டுவாடா செய்ய வில்லையா என்பது ஆய்வு செய்யும் பொழுது தெரியவரும் மேலும் ஒவ்வொரு பூத்துக்கும் 300 வாக்குகள் கணக்கு செய்தும் பதிவாகாமல் போனது எப்படி என்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

பேராண்மை..