பழைய கட்டிடம் இடிந்து விழுந்து | கொத்தனார் பலி |
மே 25-2019…,
பீகார் மாநிலத்தை சேர்ந்த லால் பாபு (21). இவர் கொத்தனார் ஆவார். நேற்று இவர் சென்னையில் தங்கி அண்ணா நகர் 11வது மெயின் ரோட்டில் உள்ள பழைய கட்டிடத்தை ஆல்ட்ரேஷன் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று பழைய கட்டிடம் இடிந்து கொத்தனார் மீது விழுந்ததில்… கொத்தனார் உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கொத்தனாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.இது குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் பில்டிங் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்