கடைக்குள் புகுந்து பொறுப்பாளரையும் விற்பனையாளரையும் தாக்கிய வாலிபர்கள்…

மே, 23-2019..,
சென்னை, புரசை, மூக்காத்தாள் தெருவில் அமைந்துள்ள DRESS WELL கடைக்கு நேற்று மாலை 4:00 மணியளவில்… கடைக்கு வந்த ஒரு சில வாலிபர்கள் கடை பொறுப்பாளரயும்(Cashier) விற்பனையாளரயும் (SALES MAN) கடுமையாக தாக்கியதில் காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

தகவல் தெரிந்த உடன்… புரசை வியாபார சங்க செயலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி பாதிக்க பட்டவரோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளார்…

வியாபார தளத்தில் புகுந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது…
நமது நிருபர்.