இன்று கண்ணகி சிலை அருகே விதியை மீறி அரசு பேருந்து காரின் மீது மோதி பெண் ஒருவர் பலி 2-பேர் படுகாயம்…
சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதியும் (வயது70)அவரது பேத்தி ஆனந்தியும் (வயது 24)வெளியில் செல்வதற்காக வாடகை கார் புக் செய்துள்ளார் ஓட்டுநர் வெங்கடேஷ் தனது காரில் இருவரையும் அழைத்து செல்லவதற்காக கீழ்பாக்கம் வந்து
ஹேமாவதி மற்றும் ஆனந்தியை ஏற்றி கொண்டு மெரினா கடற்கரை சாலை திருவள்ளூவர் சிலை அருகில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது கேளாம்பாக்கத்தில் இருந்து பிராட்வே மார்கமாக வந்து கொண்டிருந்த வழிதடம் எண் 109 பேருந்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது ஆனால் பேருந்தின் ஒட்டுநர் அதிவேக முந்த முயற்சி செய்து எதிர் திசை சாலை முழுவதுமாக சென்றுள்ளார் அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் 3 பேரையும் உயிருடன் மீட்டனர். மேலும் 3 பேரையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஹேமாவதி உயிரிழந்தார் மேலும் காரில் பயணம் செய்த ஹேமாவதியின் பேத்தி ஆனந்தியும் கார் ஒட்டுநர் வெங்கடேஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளத்து 2-பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது…