Fri. Dec 20th, 2024

வேறு சர்ச்-யை சார்ந்தவர் என புதைக்க இடமில்லை | சடலத்தை வைத்து சாலைமறியல் |

சென்னை முகப்பேர் வேணுகோபால் தெருவில் வசித்து வந்தவர் தசரதன்(50) இவர் இந்து மதத்தில் இருந்து கிரிஸ்தவராக மாறியவர். நேற்று இரவு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார் அவருடைய உறவினர்கள் அதே பகுதியில் உள்ள கிரிஸ்தவ சுடுகாட்டிற்கு தகவல் கொடுத்து புதைக்க அனுமதி கேட்டுள்ளனர். அந்த சுடுகாட்டை பராமரித்து வரும் பாதிரியார் ஆசீர்வாதம் என்பவர் எங்கள் சர்ச்சிக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த சுடுகாட்டில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும். வேறு தேவாலயத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லி புதைக்க இடம் தராமல் சுடுகாட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11:00 மணி அளவில் திடீர் என்று சாலையில் பிணத்தை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நொளம்பூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்தனர் பின்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்…

நமது நிருபர்