Fri. Mar 14th, 2025

தொடர்ந்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை | வியாபாரிகள் பீதி |

மே, 17-2019..,

சென்னை, வில்லிவாக்கம் அம்பேத்கார் தெருவில் உள்ள அன்பானந்தம் (70) என்பவர் ஏ.கே.எம் டெக்ஸ்டைல் என்னும் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீடு சென்றவர்… இன்று காலை வழக்கம் போல கடை திறக்க வந்துள்ளார். அப்பொழுது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு… உள்ளே இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த ஆடைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை அறிந்தார்.

அதே போல பக்கத்தில் இருந்த முகமது அலி (37) என்பவரின் பேன்ஸி ஸ்டோர் மற்றும் கவுஸ் பாஷா (55 ) என்பவரின் இஸ்திரி கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் உள்ளே பணம் எதுவும் இல்லாததால் திரும்பி சென்று உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சம்பவ இடத்துக்கு வந்த வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வில்லிவாக்கம் பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது…

நமது நிருபர்