Sun. Oct 6th, 2024

தொடரும் மணல் கொள்ளை | மணலில் சிக்கிய நால்வர் ஒருவர் பலி |

மே, 17-2019…,

அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்ட தங்கவேல் என்பவர் மண் சரிந்து உயிரிழப்பு….

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு, சர்க்கிள் தாஸ், ஏழுமலை, நாகராஜ் ஆகியோர் வளர்புரம் அருகே செல்லும்.. கிருஷ்ணாபுரம் ஆற்றில் அனுமதியின்றி மணல் கொள்ளையில் கடந்த மே, 15 அன்று அதிகாலையில் ஈடுபட்டு இருந்தபோது… 5:30 AM மணி அளவில்.. எதிர்பாராத விதமாக மணல் சரிந்து 4 பேரும் சிக்கிக் கொண்டனர்.

இதில் வளர்புரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் தங்கவேலுவின் தலை மண்சரிவின் போது… மண்ணுக்குள் சிக்கிக் கொண்டதால்… அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்

மேலும் சர்க்கிள் தாஸ், ஏழுமலை, நாகராஜ் ஆகிய 3 பேரின் உடலும் மார்பளவு மண்ணில் மாட்டிக் கொண்டதால் கிராம மக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு… திருத்தணி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த தங்கவேலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவிர அந்த ஊரைச் சுற்றி மூன்று இடங்களில் மிகப் பிரபலமான முறையில் மணல் எடுக்கும் கும்பலில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் உள்ளார்கள். குறிப்பாக திருத்தணியை சேர்ந்த சில காவல்துறை உதவி ஆய்வாளர்கள் அரக்கோணம் பகுதியில் கிராம காவல் நிலையத்தில் வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு உதவியாக மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கு இருந்து மணல் அரக்கோணத்திற்கு மற்றும் திருத்தணிக்கு கடத்தப்படுவது தினசரி சம்பவமாகும்.

குறிப்பு :- இந்த சம்பவம் காரணமாகவே இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்கும் வகையில் சிறப்புப்படை ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்