அறிக்கையில் முறைகேடு?| ஐ.ஜி.,அதிரடி மாற்றம் |
புதிய ஐ.ஜி.,யாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம்.!
ஐ.ஜி., செந்தாமரை கண்ணன் திடீர் அதிரடி மாற்றத்திற்க்கான காரணம் என்ன.? என காவல் துறையில் பரப்பராக பேசப்பட்டு வருகிறது. எதற்காக இந்த அதிரடி மாற்றம் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
காவலர் எஸ். அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக காவல் துறையில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வில் சரியான பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதனை பரிசீலிக்க தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது…
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அளித்த விடை தவறானது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதி எது சரியான விடை என்பதை ஐ.ஐ.டி.,யில் பணியாற்றும் கணித நிபுணரிடம் அறிக்கை பெற்றுத் தாக்கல் செய்யும்படி சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, ஐ.ஐ.டி.,யில் பணியாற்றும் கணித் பிரிவு பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அரசின் விடை தான் சரி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த மனுவின் மீது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஐ.டி.,யில் டி.மூர்த்தி என்ற பெயரில் பேராசிரியர் யாரும் இல்லை என்றும், அப்படி ஒரு நபர் இதற்கு முன் பணியாற்றி ஓய்வு பெறவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற நகலை மனுதாரர் அருணாச்சலம் உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் புகார் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக போலி ஆவணங்களை தாக்கல் செய்த ஜி.வி.குமார், டி.மூர்த்தி ஆகியோர் மீது மோசடி கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து ஜி.வி.குமாரை கைது செய்தனர். இந்நிலையில் சீருடை பணியாளர் தேர்வு ஆணைய ஐ.ஜி., செந்தாமரை கண்ணனை திடீர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
ச.விமலேஷ்வரன்
பத்திரிகையாளர்