அமைச்சரின் பினாமி என | அ.தி.மு.க.,வில் ஆட்டம் போட்ட | தொகுதி செயலாளர் திடீர் தலைமறைவு |
மே, 16, 2019…
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அ.தி.மு.க., தொகுதி செயலாளராக வலம் வந்தவர் கந்தசாமி என்ற திங்களூர் கந்தசாமி.
இவரது முக்கிய செயல்பாடுகள்… சொந்த கட்சியினரிடையே பணம் பறிப்பதில் கில்லாடி. இவரது லொல்லு நாளுக்கு நாள் அதிகமாகவே, அவரது கட்சி தொண்டர்கள் தலைமைக்கு புகார்கள் தொடர்ந்து சென்றதால் ஜெயலலிதாவால் அவரை ஓரங்கட்டப்பட்டார்.
இவரது தொகுதி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு நடந்த அரசியல் மாற்றங்களால் சுற்று சூழல் துறை அமைச்சர் கருப்பணனிடம் ஒட்டிக் கொண்டார். பின்பு கந்தசாமி கிட்டதட்ட அமைச்சரின் பினாமியாகவே மாறி தொகுதியில் வலம் வந்து கொண்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க சென்ற இடத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த சங்கரை ஜாதிரீதியாக திட்டியதும் இல்லாமல்… கொலை மிரட்டல் விடுத்ததாக கந்தசாமி உட்பட ஐந்து பேர் மீது பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அப்புகாருக்கான குற்ற பத்திரிக்கை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும்.. இது வரை அமைச்சர் கருப்பணனின் ஆதரவில் தனிகாட்டு ராஜாவாக வலம் வந்த கந்தசாமி, இன்று தலைமறைவானார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திங்களூர் வெட்டையகிணறு உள்ளட்ட பகுதிகளில் அதிமுக கரைவேட்டியை கட்டிக்கொண்டு அமைச்சர் கருப்பணனின் ஆதரவோடு தினகரனின் அணிக்கு வேலை பார்த்த விஷயம்… கட்சி தலைமை வரை சென்றதால் அடுத்ததாக தன்மீது கைது நடவடிக்கைகள் பாயலாம் என்ற பயத்தில், கந்தசாமி ஊரைவிட்டு ஓடிவிட்டதாக பரவலாக திங்களூர் பகுதியில் பேச்சு அடிபடுகிறது.
ஆட்டம் போடுபவர்கள் எல்லாம் ஒரு நாள் அடங்கி போவார்கள் என்பது கந்தசாமி ஓர் உதாரணம்..!!!
ச.விமலேஷ்வரன்
பத்திரிகையாளர்