Fri. Dec 20th, 2024

கிணற்றில் விளையாடிய | மாணவன் பரிதாப பலி |

குற்றவாளி படத்தை கொடுக்க போலீசார் மறுப்பு?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நீச்சலடித்து கிணற்றில் விளையாடிக் கொண்டிருந்த மாணவனை விளைட்டுபோல தண்ணீரில் அமுக்கி பிடித்ததால் பரிதாபமாக பலியானான்.

இச்செயலில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில அடைத்தனர்.

பெருந்துறை அருகே சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வரப்பாளையம் ஊராட்சியில் வசிப்பவர் பாரதி (35). இவர் கணவரை பிரிந்து தன் மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது மகன் பாலமுருகன் (13). இவன் வரப்பாளையம் அரசு உயர்நிலைபள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளான். இதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சதீஸ்(எ) கோபால். இவர் தனியார் பனியன் கம்பனி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி மாணவன் பாலமுருகன் திடீரென்று காணவில்லை. அவரது பெற்றோரும் உறவினர்களும் பாலமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மேற்கு சாணார்பாளையம் பூசாரிச்சிகாடு பகுதியில் உள்ள கிணற்றில் பாலமுருகன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையறிந்த பாலமுருகனின் தாயார் பாரதி பெருந்துறை காவல்நிலையத்தில் புகாரளித்தார். மாணவனின் சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த சதீஸ் என்ற கோபாலை விசாரணை செய்த போது மாணவன் மரணம் குறித்த தகவல் வெளியானது.
கடந்த 12ம் தேதியன்று பூசாரிச்சிகாடு பகுதியில் உள்ள கிணற்றில் மாணவன் பாலமுருகன், கோபால் உள்ளிட்ட 10க்கும் மேட்பட்டோர் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கோபால் பாலமுருகனின் தலையை தண்ணீருக்குள் அமுக்கி பிடித்து விளையாடி யிருக்கறார். அப்போது எதிபாராத விதமாக பாலமுருகன் மூச்சு திணறி கிணற்றுக்குள் மூழ்கிவிட்டார். இந்த தகவலை பாலமுருகன் பெற்றோரிடம் கோபால் மறைத்துவிட்டார். இத்தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியோடு மாணவனின் சடலத்தை மீட்டனர். இச்சம்பவம் தொடர்ந்து கோபாலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 304(ii) (கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் ஒருவரின் மாரணத்திற்கு காரணமாக இருத்தல்) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின் போரில் அவரை சிறையிலடைத்தனர்…

நிருபர் சண்முகசுந்தரம்