Fri. Mar 14th, 2025

அயன் பட பாணியில் மலக்குடலில் தங்கம் கடத்திய கும்பல் கைது…

மே, 16-2019

சென்னை…விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பிடிப்பட்டது.!

சென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 15) சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் 3 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

நேற்று கொலம்புவில் இருந்து விமானத்தில் வந்தடைந்த 4 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் சுங்கத்துறை அதிகாரிகளின் பார்வையில் சந்தேகிக்கும் படி இருந்தனர்.

அந்த 9 நபர்களையும் அழைத்து விசாரித்ததில்… அவர்களில் தொணௌடி ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கனி (38) என்பவர் இந்த 9 பேர்களின் தலைவனாக கூறப்படுகிறது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்து… கடைசியில் மலகுடலில் தங்கங்களை வைத்து கடத்தி வந்ததாக ஒப்புகொண்டனர். இந்த 9 நபர்களையும் பரிசோதித்ததில் மொத்தம் 25 பண்டல்கள் ரப்பர் சீல் போட்டு மலக்குடலில் கடத்தி வந்துள்ளது தெரியவந்தது.சுமார் 2.93 கிலோ எடையுள்ள தங்கங்கள் ரூபாய் 3 கோடி மதிப்பிலானவை. இதை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முகமது கனியுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் பெரம்பலூரை சேர்ந்த அப்பாஸ் (41), எஸ் பி பட்டினத்தை சேர்ந்த மைதீன் (51), திருச்சியை சேர்ந்த முகமது ரஃபீக் (37), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கற்பகம் (45), திருச்சியை சேர்ந்த ஷமீம் பேகம் (45) மற்றும் நாகூர் அம்மா (40), பாப்பனாடை சேர்ந்த ஸ்ரீமதி (41), மதுரை வத்தலகுண்டை சேர்ந்த பரமேஷ்வரி (55) ஆகியவர்களை தங்கம் கடத்தியதியதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்…

நிருபர் ராம்