Fri. Mar 14th, 2025

காவலாளி கையை வெட்டி | செல்போனை பறித்த வாலிபர் கைது |

மே, 15-2019…,

அசாம் மாநிலத்தை சேர்ந்த அனீஸ் சச்சுவா (22). இவர் சென்னை திருமங்கலம் வி.ஆர் அப்பார்ட்மெண்டில் காவலாளியாக பணிபுரிகிறார்.

நேற்று இரவு 11:00 மணி அளவில் காவலாளி அனீஸ் சச்சுவா பணியில் ஈடுபட்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில்.. அந்த வழியாக வந்த வாலிபர் காவலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டு உள்ளார். காவலாளி செல்போன் தராததால் ஆத்திரத்தில் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலாளி கையை கிழித்து விட்டு செல்போனை பறித்து சென்றனர். காவலாளி அனீஸ் சச்சுவா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் செல்போன் பறிக்கும் காட்சியை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளி பாடி குப்பம் ரயில் நகரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து.. அங்கு சென்று குற்றவாளியை பிடித்தனர். கைது செய்த வாலிபரிடம் விசாரணை செய்ததில் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம்… தற்போது திருமங்கலம் பாடி குப்பம், பாட்டி வீட்டில் தங்கி வந்த நந்தா (எ) நந்தகுமார் (19). .. இவர் தான் காவலாளி கையை வெட்டி செல்போனை பறித்தது என ஒப்புக்கொண்டார்.

Document

இவரிடம் இருந்து செல்போன் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். கைது செய்த நந்தகுமாரிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நந்தகுமார் மீது 2018ல் ஜெ.ஜெ நகர் காவல் நிலைத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்