அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து | திருடியவர் தானா இவர்?|
அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து | திருடியவர் தானா இவர்?|
அண்ணாநகர் பகுதியில் டைட்டன் ஷோரூம் எதிரில் உள்ள கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை எடுத்து சென்றுள்ளனர். சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் அதில், இரும்பு கம்பியைக் கொண்டு ஒருவர் ஷட்டர் கதவை உடைக்கும் காட்சிகளும், உள்ளே நுழைந்தபின், கல்லாபெட்டி லாக்கரை உடைத்து பணத்தைத் திருடும் காட்சிகளும் கொள்ளையனின் முகத்துடன் தெளிவாகப் பதிவாகி இருந்தது அது ஆந்திராவை சேர்ந்த பிரபல கொள்ளையன் ஊமையன் மார்க் (எ) சிவா (29) என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் கையில் கடப்பாரையோடு கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் வெளியே செல்லும் கேட் அருகே நின்றிருந்த சிவாவை தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாய் பேச முடியாத இவன் கொத்தனார் வேலை பார்ப்பது போல் கையில் கடப்பாரை வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் பூட்டியிருக்கும் ஷட்டர்களை உடைத்து கைவரிசை காட்டுவது இவரது வழக்கமாம். இவர் மீது வடபழனி, அண்ணா நகர், கொடுங்கையூர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது…
உண்மையாகவே இவர் தான் அண்ணா நகரில் கடையை உடைத்து திருடியவரா என இதுவரை தெரியவில்லை.
நமது நிருபர்